tamilnadu

img

ம.பி. மாநில இடைத்தேர்தலும் இந்தியா - பாக். யுத்தம்தானாம்

போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ‘ஜபூவா’ என்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக தரப்பில் பானுபூரியாவும், காங்கிரஸ் தரப் பில் மத்திய முன்னாள் அமைச்சர் கந்திலால் பூரியாவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற,அம்மாநில பாஜக தலைவர் கோபால் பார்கவ், “ஜபூவாஇடைத்தேர்தல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறும் யுத் தம்” என்று பேசியுள்ளார். மேலும், “இந்த யுத்தத் தின் போது, ஜபூவா தொகுதிமக்கள், இந்தியா பக்கமா? பாகிஸ்தான் பக்கமா? என்பதுதான் தற்போது எழுந் துள்ள கேள்வி” என்றும், “இந்தியாவின் பக்கம் என் றால் பானு பூரியாவிற்கு வாக்களியுங்கள்; பாகிஸ் தான் பக்கம் என்றால் கந்திலால் பூரியாவிற்கு வாக்களியுங்கள்” என்றும் கூறியுள்ளார்.பாஜக தலைவரின் இந்தபேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாக, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

;